''பூமியில் பிறந்த முதல் உயிர் மனிதன் அல்ல .பல உயிர்களின் பிறப்பிற்கு பின்னரே மனிதன் தோன்றினான். இந்த உலகம் மனிதனுடையது மட்டுமே அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். இந்த வாழ்வியல் விதி வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலை ஐம் பூதங்களின் உயிர் வலை .இதை மனிதன் பின்னவில்லை.உயிர்களின் கூட்டணியல் ஒருவன் தான் மனிதன். இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே.மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.''-
உலகம் பிறந்தது உயிர்களுக்காக ..நாமும் பிறந்தோம் ஒரு உயிராக..